காரிகையே...!
காரிகையே...!


விடியலில் விழித்து
பல வேலைகளை முடித்து
குடும்பத்தை மெருகேற்றி
தன்னையே மறந்து
பிறர்காக வாழும் அணங்கே..
பெண்மை எனும் போர்வைக்குள்
பன்முகங்களை மறைக்காதே..,
பெண் என உனை மிதிக்கையில்
புழுவாய் மண்ணில் மடியாதே..,
பலம் கொண்ட மட்டில் தீயாய் எழுந்திடு
உன் பலவீனம் என்பது எரிந்திடும்..,
உன் கரம் கொண்டு காலத்தை இயற்றிடு
வாழ்க்கைச் சக்கரம் உன் கையில் சுழன்றிடும்...!
நிலவாய், நதியாய்,
இயற்கையாய்,இன்பமாய்,
கவியாய், காவியமாய்,
ஒளியாய், ஓவியமாய்,
தமிழாய், தாய்மண்ணாய், தெய்வமாய்,
நீ தி்த்தித்தது போதும்...!
உயிராய்.,
இவ்வுலகில் வாழ்ந்து
உன் பெருமையை பதித்துப் போ...!
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்"