வாழ்க்கை துணை
வாழ்க்கை துணை


காதலாய் வந்த காதல் கணவனுக்கு...
வார்த்தைகள் கோர்த்து காதல் சேர்த்து
என்னுள் கவியாகிய அதிசயனே...
தவறே இழைக்காமல் ஆறுதல் அளித்திடவே
என்னிடம் தண்டனை பெறும் தேவனே...
என் விழி நீர் தடுக்க இமையால் தாங்கி
என் இதயத்தை சிறை எடுத்த கள்வனே..
விடியாத இரவுகளிலும் விரல் பிடித்து அரவணைக்கும் அழகு தாய்மையே
என்னோடு நீயும், உன்னோடு நானும்
இணைந்தே வாழும் வரம் கொடு போதும்...!
~உன்னிடம் தொலைந்த உன்னவள்