வாழ்க்கை சரிதம்
வாழ்க்கை சரிதம்


பிறப்பு ஓர் சம்பவமாக இருக்கலாம்! ஆனால்....
வாழ்க்கை ஓர் சரித்திரமாக இருக்க வேண்டும்!
ஆம்! அந்த சரி தத்தை படித்து பார்ப்பவர்களுக்கு, அதிலே பார்த்து பின்பற்ற நல்ல பண்புகளும்,....
முன்னேறத் தூண்டும் நல்ல உத்திகளும்,....
ஆங்காங்கே.... சுவாரசியமான கதைகளும் இடம் பெற வேண்டும்! ஆனால் எழுத்தாளன் இறைவன் என்னும் பட்சத்தில்....
வசனம் கூட அவனுடையதாக இருக்கிறது! இதில் நாம் எங்கே சுவாரசியத்தைக் கூட்டுவது?
அவனது எண்ணத்திலும்...எழுத்திலும்....
இயக்கத்திலும்..... வாழ்க்கை சரிதம் ஓடுகிறது! ஓடிக்கொண்டு இருக்கிறது...,.
கதை பிடிக்கவில்லை என்றாலும்.....
கதையை நிறுத்த.... காட்சியைத் துண்டிக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை!
நாம் வெறும் நடிகர்கள்!
எண்ணம்....... எழுத்து.....
கதை...... திரைக்கதை...... வசனம்.....இயக்கம்....
கதாபாத்திரங்கள்.......
ஆக்கம்..... அழிவு _ கடவுள் ( இயற்கை)