கைபேசி
கைபேசி
காலையில் எழுந்ததும் கண்ணாடியில் கண் விழித்த நான்...
கடிகாரத்தில் நேரம் பார்த்த நான்....
காலண்டரில் தேதி கிழித்த நான்.....
தொலைக்காட்சியில் படம் முதல்.... சீரியல் வரை அனைத்தையும் கண்டு இரசித்த நான்....
டேப் ரெக்கார்டரிலும்...... வானொலியிலும்.... பாடல் கேட்டு மகிழ்ந்த நான்....
உற்றார் உறவினரோடு கூடி குலவிய நான்....
சகல வைபவங்களுக்கும் நேரில் வாழ்த்து கூறிய நான்...
தினசரி நாளிதழை பக்கம் விடாமல் புரட்டி படித்த நான்.....
சமையல் குறிப்புகளை அம்மாவிடம் கேட்டு சமைத்த நான்...
சின்னஞ்சிறு கைவைத்தியங்களை பாட்டியிடம் தெரிந்து கொண்ட நான்....
ஓர் இடத்திற்கான வழியை வருவோர் போவோரிடம் கேட்டு தெரிந்து கொண்ட நான்....
என் ஓய்வு நேரங்களில் நண்பர்களோடு ஓட
ி ஆடி விளையாடிய நான்....
என் தாயின் தாலாட்டைக் கேட்டு கண்ணுறக்கம் கொண்ட நான்....
வேலை முடிந்ததும் என் சுற்றத்துடன் கூடிப் பேசி மகிழ்ச்சி கொண்ட நான்.....
அம்மா சமையலை சுவைத்துக் கொண்டே தம்பி தங்கைகளின் தட்டில் இருப்பவற்றை ஏமாற்றி எடுத்தும் வைத்தும் குடும்பத்தோடு லயித்த நான்....
வேலைகளுக்கிடையே நண்பரிடம் அரட்டை அடித்த நான்...
உறங்கும் போது தலையணையையும் அம்மாவையும் கட்டியணைத்த நான்....
இன்றோ.... அனைத்தையும் மறந்து உன் பின்னால்....
விழித்ததிலிருந்து... விழிமூடும் வரை குனிந்த தலை நிமிராமல்...
நான் உன்னோடு...... உன்னோடு மட்டுமே!
இந்த உலகை......உறவை... உணவை.... உறக்கத்தை...ஏன் எல்லாவற்றையும் மறக்கக் செய்த நீ ஒரு சூனியக்காரி....!