காதல் நாவல்
காதல் நாவல்
முடிந்துப் போனதாக
எண்ணி முற்றுப் புள்ளி
வைக்கவும் முடியாமல்,
இன்னும் இருக்கிறது
என்று எண்ணி தொடர்ந்து
எழுதவும் முடியாமல்
பாதியிலேயே
நிறுத்தி
காலத்தின் கையில்
பேனாவைக் கொடுத்துவிட்டு
நம் காதல் நாவலின்
முடிவை
எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்..!!!
