STORYMIRROR

S. Meena

Fantasy Inspirational Children

4  

S. Meena

Fantasy Inspirational Children

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்

1 min
338

இது ஓர்

உன்னத பருவம்...!


இதுதான்

இனிமையின் உருவம்..! 


ஆம்.....


நாங்கள் குழந்தைகள் 

அழகிய குறுங்கவிதைகள்...!


கவலை யாவும் போக்கிடுவோம்...


களிப்பாய் உங்களை ஆக்கிடுவோம்...


காண்போரெல்லாம் 

ரசித்திடுவர்...


காயங்களையெல்லாம் 

மறந்திடுவர்...


வெள்ளை மனம் 

கொண்டிருப்போம்...


கொள்ளை இன்பம்

கொடுத்திடுவோம்...


வேஷம் போட தெரியாது..

நேசம் காட்ட தெரியும்...


இயந்திர வாழ்க்கை தெரியாது 

இயல்பாய் வாழத் தெரியும்...


அழுதிடவும் தெரியும்

சிரித்திடவும் தெரியும்

பிறர் முன் இவற்றையெல்லாம்

மறைத்திட மட்டும் தெரியாது..!


அகத்திலுள்ள உணர்வுகளை

அப்படியே பிரதிபளிக்கும் 

கண்ணாடிகள் 

நாங்கள்...!


அடிக்கும் கரங்களுக்கு 

அஞ்சுகிறோம் 

அணைக்கும் அன்புக்கு 

அடிபணிகிறோம்....


எங்கள் விரல்களை

இருக்கிப் பிடித்து

எங்களோடே கூட

குழந்தை உலகில்

பயணிக்கத் தொடங்குங்கள்...


பல அதிசயங்களை 

காண்பிப்போம் 

பல பாடங்களைக்

கற்பிப்போம்...!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy