STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

புத்தாண்டின் புதுக் கனவுகள் 2021

புத்தாண்டின் புதுக் கனவுகள் 2021

1 min
301

புத்தாண்டில் அனைவருக்கும் புதுக் கனவு! 

புகைத்தலை நிறுத்துதல் என்பது பகல் கனவு! 

புகையிலையைத் தடை என்பது பேராசைக் கனவு!

புகையிலைப் பொருள் நாற்றம் தொலையாதா? என எண்ணுவது பொதுமக்களின் கனவு!

புகையிலையை நிறுத்துவது என்பது பூமிப் பந்தின் புது விளையாட்டுக் கனவு!

புகையால் எரியும் குப்பைபோல மூடநம்பிக்கை மறையாதா? என எண்ணுவது  நாத்திகர்களின் கனவு!

புதுமையான சமத்துவப் பண்பாடு வராதா? என்பது அரசியல் மேதைகளின் கனவு!

புங்கை மர நிழலில் நின்று புதிய சமுதாய விடியல் நமக்கு வராதா? என எண்ணுவது  சாமானிய மக்களின் கனவு !

புத்தம் புதிய வருடம் நமக்கு நன்மையே செய்யும் என்பது எதிர்காலத்தின் மீதுள்ள கனவு!

புதிய நம்பிக்கை தீபத்தில் அழகிய வாழ்க்கை என்பது ஒரு நாடகக் கனவு!

புதிய மழை நீரும் வளமான நிலமும் விவசாயிகளுக்கான கனவு!

புதுமைகள் நிறைந்த புதிய உலகத்தினை காண்பது குழந்தைகளுக்கான கனவு!

புன்னகையுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது நமக்கான கனவு! 

புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என எண்ணுவது நம்பிக்கைக்கான கனவு! 

புழுதிக் காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் கனவு!

புரிந்த வாழ்க்கையில் நமக்கு நாமே ஆசானாக உருவெடுப்பது என்பது ஒரு வாழ்க்கைக் கனவு!

புத்துணர்வுடன் புதிய ஆண்டினை வரவேற்பது என்பது ஒரு புதிய கனவு!


Rate this content
Log in

Similar tamil poem from Classics