நகர வாழ்க்கையில் மறைந்து போன பழக்க வழக்கங்கள்
நகர வாழ்க்கையில் மறைந்து போன பழக்க வழக்கங்கள்
அதிகாலைப் பொழுதில் எழுந்து வீட்டு வாசலைச் சுத்தம் செய்யும் பழக்க வழக்கங்களை மறந்தோம்!
வீட்டின் முன் பசுமாட்டின் சானத்தினைக் கரைத்து அதனைத் தெளித்து அதன் மீது அரிசி மாவுக் கோலம் இடும் பழக்க வழக்கங்களை மறந்தோம்!
வேப்பங்குச்சி, கருவேலமரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி மற்றும் அடுப்புக் கரிப் போன்றவற்றில் பற்களைச் சுத்தம் செய்திடும் பழக்க வழக்கங்களை மறந்தோம்!
கிணற்று நீரில் குளித்து விட்டு விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்துப் பிறகு இளைப்பாறிய நிகழ்வுகளை மறந்தோம்!
அதிகாலையில் எழுந்து கூட்டுக் குடும்பமாக இணைந்து உணவுச் சமைப்பதனை மறந்தோம்!
காலையில் எழுந்தவுடன் நீராகாரம் பருகுவதனை மறந்தோம்!
விவசாய நிலங்களில் கடுமையாக உழைத்துப் பிறகு மதிய வேளையில் மரங்களின் நிழலில் அமர்ந்து உணவினைப் பகிர்ந்து உண்பதனை மறந்தோம்!
கூட்டுக் குடும்ப உறுப்பினர்களின் சிறிய மனக் குறைகளைக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் கலந்து பேசி அதற்கான நிரந்தரத் தீர்வு காணும் பழக்க வழக்கங்களை மறந்தோம்!
காலைப் பொழுதில் வீட்டில் உள்ள ஆண்கள் செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்க வழக்கங்களை மறந்தோம்!
மாலைப் பொழுதில் வீட்டில்
உள்ள பெண்கள் மலர்களைத் தொடுத்து அவற்றை இறைவனுக்கும் பெண்களுக்கும் சூட்டும் பழக்க வழக்கங்களை மறந்தோம்!
பொருள் ஈட்டும் ஆண்கள் பணிக்குச் செல்வதற்கு முன் கூட்டுக் குடும்பமே ஒன்று சேர்ந்து உழைத்து அவர்களுக்கு உதவி செய்வதனை மறந்தோம்!
கூட்டுக் குடும்பத்தில் உள்ள சமையல் பணிக்காகக் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் ஒன்றிணைந்துப் பணியாற்றுவதனை மறந்தோம்!
குடும்பத்தில் உள்ள சிறுவர்களுக்கு அறிவுப் பூர்வமான விளையாட்டுப் பயிற்சிகளைக் கொடுப்பதனை மறந்தோம்!
குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அரிசிக் கோலம் இடும் கலையினைக் கற்றுக் கொடுப்பதனை மறந்தோம்!
சிறிய குழந்தைகளுக்கு மரத்திலான நடைவண்டியினைக் கொடுத்து நடை பயிலக் கற்றுக் கொடுப்பதனை மறந்தோம்!
உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அன்புடன் உரையாடுவதனை மறந்தோம்!
உற்றார் உறவினர்களின் மகிழ்ச்சிகளுமான நிகழ்வுகள் மற்றும் துயர நிகழ்வுகளில் உரிமையாகப் பங்குகொள்வதனை மறந்தோம்!
கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்த பொன்னான காலங்களை மறந்தோம்!
உறவினர்களின் பாசத்தினைத் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்து வருகின்ற நிகழ்வுகளை மறந்தோம்!