மழைக் காட்சி
மழைக் காட்சி
மழை சுமந்த முகில்கள்
காற்றில் அலைக்கழிக்கப்பட
காரிருள் எங்கும் சூழ
இருளகற்ற மின்னலும்
அவ்வப்போதே ஒளியை பாய்ச்ச
வான வீதியில் பெரும்
மத்தளச் சப்தமாய் இடியும்
உடனிசைக்க - வானின்று
கிழிறங்கியே மழையும்
மண் மீதே
தண்மையை நிறைக்க
காற்றும் தன்பங்கிற்கு
தாலாட்டு பாட - அதில்
இலயித்த மரங்களும்
தலையசைத்தே
இனிதே ஒரு
மழைக் காட்சியின் அரங்கேற்றம்!