STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Fantasy

4  

Kalai Selvi Arivalagan

Fantasy

சுனாமி – ஒரு அசைவ காதலன்

சுனாமி – ஒரு அசைவ காதலன்

1 min
22.9K


ஆர்ப்பரிக்கும் ஆயிரம் கரங்கள் நீட்டி

ஆசையுடன் நீ தழுவிய தழுவலில்

நில மகளின் தேகமெங்கும்

உதிரும் வியர்வைத் துளிகளாக

உயிரற்ற மனித உடல்கள்!

அலை ஒசையாய் நித்தமும் கேட்ட

உன் காதல் இராகங்கள் – ஏனோ

இன்று ஒலித்தன மரண ஓலங்களாய்?

ஊழி கூத்தாய் மாறிவிட்ட

உன் காதல் கூத்தின் அடையாளங்கள்

நில மகளின் மேனியெங்கும்

கன்றிப் போன வடுக்களாக

விகாரமாய் இன்று தோன்றுவதேன்?

இயற்கையை துச்சமாய் எண்ணியதே

இதற்கு காரணம் என்று புரிந்தாலும்

ஒர் விண்ணப்பம் – மீண்டும்

உன் காதல் களி நடனத்தை

எங்களால் தாங்கிட இயலாது – ஆகையால்

உன் அசைவ காதலுக்கு விடுமுறை அளித்துவிட்டு

மீண்டும் வருவாயா அமைதிக் கடலாக?


Rate this content
Log in