STORYMIRROR

Narayanan Neelamegam

Fantasy

4  

Narayanan Neelamegam

Fantasy

என் செல்ல நாய்

என் செல்ல நாய்

1 min
22.6K


உன் மேல் 

ஒரு அன்பு 

அதனால் 

ஒரு பெயர் 

வைத்தேன் 

பாபி என்று 

அழைத்தேன் 

அனு தினமும் .........!!! 


என் மீது 

நீ வைத்த 

பாசம் 

உலகில் 

இது வரை 

அளக்க 

ஒரு கருவி 

இல்லவே இல்லை ......!!!


குட்டியே 

நீ மேலும் 

கீழுமாய் 

வாலை 

ஆட்டி 

என் கால் 

சுற்றி வரும் 

அழகே அழகு ......!!!


எனக்கு, 

நண்பனாய் 

அருகில், 

சேவகனாய்

>வாசலில், 

காவலனாய் 

இரவினில்,

திறனே திறன் ......!!!


உணவை 

நீ சுவைத்து 

மகிழ்தாலும் 

ஒரு எலும்பு 

துண்டை 

தேடி கடிக்க

ரசிக்க 

அலாதி அலாதி......!!!


உன் திறமை 

மோப்பத்தால் 

நல்லவர் 

கேட்டவர் 

அறியும் 

ஆற்றல் 

இயல்பாய் 

இனிது இனிது ......!!!


வித வித 

வண்ணங்கள் 

பல பல 

வகைகள் 

நிறைய 

இனங்கள் 

உன்னில் 

சிறப்பே சிறப்பு ......!!!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy