"நான்"ஆக...
"நான்"ஆக...
சுழலும் பூமியினுள்
வாழ்க்கைக் கென்று
அர்த்தம்....
அர்த்தமற்ற ஒன்று...
நான் என்பது முளைக்காதவரை !
நான் என்பதே அர்த்தம் என்றால்
அனர்த்தம் அல்லவா அது !
ஆடும் அண்ட சராசரங்களின் ஊடே
புள்ளி வடிவில்
புவி இருக்க...
நான்
மட்டும் எப்படி
அண்ட சராசரமாய் !
"நான்"இல்லாது நான் இல்லை
அன்றிலும் நான் இல்லை எனினும்
"நான்" உண்டு...
"நானே" நான் ஆன போதிலும்
நான் என்பது உள்ளவரை நான்
"நான்" ஆவதில்லை !
"நானை" உணர வந்த நான்
ஏனோ நான் எனும் மாயையில் !
எல்லாமும் "நான்" ஆக
நான் மட்டும் நானாக...
விந்தையிலும் விந்தை...!
தெளியவில்லை சிந்தை...!
"நானுக்கோர்"
பேர் சூட்டி
பட்டமிட்டு
பதவி தந்து
பந்து மித்ர உறவில் இணைத்து
ஆட்டமென்ன பாட்டமென்ன
அனைத்தும் முடிந்து
"அது" அடங்கிப் போவதென்ன !
விடையேதும் அறியாமல்
விளைவேதும் தெரியாமல்
வினைப்பயனும் புரியாமல்
விழுகிறேன் எழுகிறேன்
விரைகிறேன்
வீழ்ந்து முடிந்து எழுகவே
மீண்டுமீண்டும்...நான்
"நான்" ஆக...!
நன்றியுடன்...
MK🎊🎶🕊️
