STORYMIRROR

Muthumanikandan N

Others Children

4  

Muthumanikandan N

Others Children

நண்பேன்டா

நண்பேன்டா

1 min
35

வெள்ளை சட்டையில் கிறுக்கிவிடுவான் இந்த கிறுக்கன் 


கமர்கட் கடித்து பாதி கீழே விட்டுவிடுவான் இந்த வெலங்காதவன் 


 இன்க் பேனாவில் ஒரு சொட்டு 

கடன் வாங்கி இன்னும் திருப்பி தராத கடன்காரன் 


வகுப்பு நடக்கும்போது வம்பிழுத்து 

மாட்டிவிட்டு மகிழ்ச்சி அடைவான்

இந்த மடையன் 


பட்டப்பெயர் வைப்பதில் 

பட்டம் பெற்றவன் 

இந்த பைத்தியக்காரன் 


எல்லாமே விளையாட்டுதான் இவனுக்கு, ஆனால் விளையாட்டில் மட்டும் நண்பனே எதிர் அணியில் இருந்தாலும் எதிரி தான்


மதிப்பெண் எடுப்பதில் பொறாமையே கிடையாது, ஆனால் 

வகுப்பு பெண்களை சைட் அடிப்பதில் என்றுமே போட்டிதான் 


போன் இல்லாத காலத்தில் 

இந்த புறம்போக்குடன் தான்

பொழுதுபோக்கு 


பத்துரூபாய் பிரௌவ்சிங் 

சென்டர் பார்க்கவைத்த பாவி பையன் 


மாதக்கணக்கில் போன் செய்யாமல் கண்டவுடன் கதை சொல்லும் பொய்யன் 


வருடக்கணக்கில் வசைபாடலாம் இவனை ,


என்னை விட இவனை திட்ட எவனுக்கு இருக்கு உரிமை ...


 .... நண்பேன்டா ....



Rate this content
Log in