வளம் நலம் பெறட்டும்
வளம் நலம் பெறட்டும்


தீபாவளி.... ஆஹா எத்தனை மகிழ்ச்சி!
எண்ணெய் குளியல்!
எண்ணம் போல் புத்தாடை!
எண்ணிலடங்கா வாழ்த்துக்கள்!
எண்ணெய் பலகாரம்!
எலும்புக் கறி!
எத்தனை... எத்தனை... மகிழ்ச்சி!
என்றோ அழித்த நரகாசுரனின் அழிவு!
எம்பெருமான் கிருஷ்ணனின் வெற்றியை காலங்காலமாக கொண்டாடி மகிழும் மனிதனே!
சற்று நில்!
உன்னிடம் பொறாமையென்னும் அரக்கன் பல இழிசெயல்களில் ஈடுபடுகிறானே!
காமம் என்னும் அரக்கன்.... பால்மணம் மாறா பச்சிளங்குழந்தைகளையும் காவு வாங்குகிறானே!
கள்ளக்காதல் என்னும் அரக்கன்.....
கட்டிய மனைவி, கணவனை, ஏன் பெற்ற குழந்தைகளைக் கூட பலி இடுகிறானே!
உண்ணும் உணவில்
விஷம் என்னும் அரக்கன்
உன் உயிரை குடிக்கிறானே!
பேராசை என்னும் அரக்கன்
இப்புவியில் பல எளிய உயிர்களுக்கு வாழ இடம் தராமல் கொன்று குவிக்கிறானே!
சோம்பேறி என்னும் அரக்கன் உன்னை முன்னேற விடாமல் முடங்கச் செய்கிறானே!
செல் என்னும் அரக்கன் பல ரது வாழ்க்கையை மட்டுமல்ல வாழ்நாளை பறித்துக் கொள்கிறானே!
எத்தனை... எ
த்தனையோ அரக்கர்களை உன்னை வலம் வரச்செய்து விட்டு...
என்றோ அழிந்துபோன அரக்கனின் அழிவை கொண்டாடி....
பட்டாசு என்னும் கொடிய விஷத்தை காற்றில் பறக்கவிட்டு மாசு என்னும் அரக்கனை வளர்ப்பானேன்?
மாசு என்னும் அரக்கன் ஓசோனை துளைத்தது மட்டுமல்ல சுவாசிக்கும் வளியினையும் நஞ்சாக்குகிறான்!
பஞ்சமில்லாமல் கிடைத்த வளியை பலியிட்டு விட்டு...
என்ன செய்வீர்?
மரமென்னும் கண்ணப்பிரானை மண்ணில் மலரச் செய்து மாசு என்னும் அரக்கனை அழித்து....
உன் சந்ததியினர் மகிழ்ச்சியாக வாழ வழி செய்!
இயற்கையை நீ காக்க மறந்தால்...
அது உன்னை தாக்க மறக்காது!
பட்டாசு-'பட்' டென்று வெடிக்கும் ஆசு(குற்றம்)
மத்தாப்பு உனக்கு நீயே வைத்துக் கொள்ளும் மற்றுமொரு ஆப்பு இதை உணர்ந்து மனிதா... நீயும் வாழ்! மற்றவற்றையும் வாழ விடு!
தீப ஒளியுடன் தீபாவளி இனிதே ஒளிவீசட்டும்!
அந்த ஒளி உம் சந்ததியின் வாழ்விலும் வீசட்டும்!
வளமான வாழ்வு அனைவருக்கும் கிடைக் கட்டும்!
வளியை யாவது மக்கள் இலவசமாய் அடைய ட்டும்!
தீபாவளி தீபாவளி ஒளியுடன் மலரட்டும்!