சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே
பொட்டு
உன் சீரிய சிந்தனை
வெளிப்பாடின் மிச்சம்
நெத்திச்சுட்டி
உன் தன்னடக்கத்திற்கு
கொடுத்த கிரீடம்
காதின் தோடு
உன் திறமை கண்டு
ஊரார் போற்றி வழங்கிய
நற்சொற்களின் சின்னம்
கைகளின் வளையல் சத்தம்
உன் கனவுகள் நினைவாகும்
கைதட்டல் சத்தம்
மோதிரம்
உன் வீரத்தில்
கைகள் பேசின மொழியின்
விருது
ஒட்டியாணம்
உன்னில் உருவாகும்
உயிர்க்கு கொடுக்கும்
அங்கீகாரம்
கால் கொலுசு
உன் சுதந்திர நடைக்கு
உலகம் வழி விடும்
ஓசை
காத்துக்கொண்டிருக்கும்
ஆபரணங்களை பூட்டிக்கொண்டு
சிறகடித்து சிறந்து வா
சிங்கப்பெண்ணே