கோரண்டைன் நாட்கள்
கோரண்டைன் நாட்கள்
எப்படி நாளை ஓட்டலாம்
என்று எண்ணாமல்
எப்படி எப்படி எல்லாம் வாழலாம்
என்று எண்ணலாம்...
வீட்டில் இருந்து வேலை மட்டும் பார்க்காமல்
வீட்டு வேலையும் பார்க்கலாம்...
Insta post மட்டும் பார்த்து சிரிக்காமல்
வீட்டில் இருப்பவர்களுடனும் பேசி சிரித்து மகிழலாம்...
தொடர்ந்து செய்திகள் மட்டும் பார்க்காமல்
குடும்பத்தோடு சேர்ந்து நல்ல படங்களை பார்க்கலாம்....
தூரம் இருக்கும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும்
தொடுத்திரை மூலம் இணையாலம்...
எல்லாருக்கும் எல்லாம் இருக்காது
இல்லாதவர்க்கும் இயலாதவர்களுக்கும்
எதாவது ஒரு வகையில் உதவலாம்...
தேவையற்றதை யோசிக்காமல்
தேவையான சிந்தனையை வளர்க்கலாம்...
நமக்கு பிடித்ததை செய்யலாம்
நமக்கு வரவே வராது என்று நினைப்பதை
முயற்சி செய்து பார்க்கலாம்...
தற்காலிகத்தில் இருந்த போது
நிரந்தரத்துக்கு ஏங்கினோம்
நிரந்தரத்தில் இருந்து கொண்டு
எதை நாம் தேடுகிறோம்...?