Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.
Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.

வாழ்க ஊரடங்கு!!

வாழ்க ஊரடங்கு!!

1 min
428


வழக்கம்போல் வந்துதித்தான் ஆதவன்...

அடங்கிப்போனது உலகம்..

முடங்கிப் போனது வாழ்க்கை...

மடங்கிய நாற்காலி விரித்து,

மழலையாய்

என் கைக்குள்

செல்பேசி!

விரல்கள் நீவ, நீவ

வினாடிக்குள் உலகம்

உள்ளங்கை வசம்!!

" எங்கும் கிருமி

என்பதே பேச்சு..

நாம் எல்லோரும்

சமமென்பது உறுதி ஆச்சு!'...

சற்றே எழுந்து

சோம்பல் முறித்து,

சுற்றும், முற்றும்

பார்த்தேன்...

எனைக் கொண்டவள்

அடுக்களையில்...

கொடுத்தவள் என்னருகில்....

செய்தித்தாளினுள்

செருகிக் கிடந்த

சருகாய் தந்தை!!

புத்தகத்தோடு மகன்...

புன்னகைப் பூவாய் மகள்!!

நானெழுந்ததைக் கண்ட

அம்மா ஓடினாள்...

அடுக்களைக்குள்!!

" நகரு... இன்னிக்கு என் சமையல்...அவன்

வீட்டிலிருக்கான் ..!"

ஆரவாரச் சிரிப்பு...

அடங்கி நகர்ந்தாள்

மனையாள்....

அவள் மகனை நோக்கி...

தந்தை மெல்ல

தாயிடம் சொன்னார்

"அவனுக்குப் பிடிச்சதைப் பண்ணு"...

மெல்ல எழுந்து மகனின்

அறை சென்றேன்...

நேர்த்தியான அறைக்குள்

நேர்மையானவர்கள்

வரிசையாய் அலமாரிக்குள்!!

ஒற்றை விரல் தொட்டு

பக்கம் திருப்ப,

அங்கே ஆணியறைந்ததோர்

அற்புத வாசகம்.‌

" முதலில் உன்னை

நீயுணர்!".

இவ்வளவு அறிவாளியா

என் மகன்?!!

மகளறைக்குள் சென்றேன்...

இயற்கையும், செயற்கையும்

இறைந்து கிடந்தன

ஓவியங்களாய்!!

வயல் வரப்பும்,

கடல் நுரையும்,

கற்சிற்பமும்,

சொற்பேழையும்...

கண்ணுக்கு விருந்து ‌.‌!

ஏதுமே அறியாத

என்னை நொந்தபடி

நானமர,

நீண்டதோர் வளைகரம்,

நிரம்பிய தேநீர்

கோப்பையோடு!! அருந்தும் துளிதோறும்

ஆயாசப் பெருமூச்சு....

எத்தனை இழந்திருக்கிறேன்?!!

அறுபதிலும் அற்புதமாய்ச்

சமைத்துப் போட அம்மா ‌.

எழுபதானாலும்

என் விருப்பம் கேட்கும்

அப்பா...

தன் வேலையை

எனக்காய் விட்டுத்தந்த

மனைவி ‌..

பாராட்டாத தந்தை

இருந்தும்

பரிகசிக்காத மகன்!!

திறமைகளை

தானே வளர்த்தபடி

முன்னேறும் மகள்...!

எல்லாமிருந்தும்

ஏதுமற்றவனாய்

நின்றேன்....

பதமாய்ப் பரிமாறிய

தாய்...அதே சுவை...

ஆவல் பொங்கும்

சுருங்கிய விழிகள்!!

மனைவியோ

மனநிறைவோடு ‌..

" அப்பாடா... எத்தனை

நாளாச்சு... இப்படி

ஒண்ணா சாப்பிட்டு!!"

உணவினூடே

அன்பும், அரவணைப்பும்

வழிந்தோட,

எதற்கும் தொல்லை

தராத என் சுற்றம்!!

அப்போது தான்

நினைத்தேன்...

இங்கே இல்லாத

எதை நான்

எங்கோ

தேடுகிறேன்?!!

எதை நிரப்ப

இல்லம் மறந்து,

நேரமின்றி,

நேயமின்றி

ஓடுகிறேன்?!!

என்னை செதுக்கியவர்களுக்கு

என்ன தந்தேன்?

என்னால் உதித்தவர்க்கு

என்ன அளித்தேன்?

என்னில் பாதியை

எப்படி மறந்தேன்?

இவ்வளவு அழகா

என் இல்லம்?!!

இத்தனை இதமா

என் வீடு?!!

இவ்வளவு அற்புதமா

என் சுற்றம்?!!

குற்ற உணர்வு தந்த

மௌனத்தில்

விழியோரம் நீர்த்துளி...

மனதிற்குள் சபதமெடுத்தேன்...

இனி வீட்டிற்கு

வெளியே

காலணிகளோடு,

என் கர்வத்தையும்

கழற்றி விடுவதென...!

வார இறுதி,

குடும்பத்திற்கு உறுதி!!

அளவான பயன்பாடாய்

செல்பேசி..

அங்கே உன்

சுற்றத்தை நீ நேசி!!

இறுதியாய் ஒன்றை மட்டும்

உரக்கச் சொன்னேன்

"வாழ்க ஊரடங்கு"!!.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract