என் வாழ்க்கை என் கையில்!!
என் வாழ்க்கை என் கையில்!!
தீதும், நன்றும் பிறர்தர வாரா...
பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும்
தத்தம் கருமமே
கட்டளைக்கல்!!
என் கருமத்தை, கடமையை, வாழ்வைத்
தீர்மானிப்பது யார்?!!
அதைத் தீர்மானிப்பது என் முன்வினைப் பயனல்ல...
மூதாதையர் புண்ணியமும் அல்ல!!
நானே எனது எதிர்காலம்!
நானே எனக்கு வழிகாட்டி!!
இது இறுமாப்பல்ல,
இதுவே யதார்த்தம்!!
ஆறுகள் அதன் போக்கை தாமே
தீர்மானிக்கின்றன....
ஆகாயப் பறவைகள்
அதன் தடத்தை தாமே தீர்மானிக்கின்றன!!
அடுக்களை இருட்டில்,
அஞ்சறைப்பெட்டி நிழலில்,
அப்பாவின் முடிவுக்காய் ஆரணங்குகள் வாய் மூடி காத்திருந்த காலத்தைக்
காணவில்லை!!
நான் நாளைய புதுமைப் பெண்ணின் இன்றைய
பிரதி....
இளைய பிரதிநிதி....
சிந்தனையில் தெளிவு கொண்டு, சிகரங்களைக்
கைக்கொள்ள
அறிவும், துணிவும்
எனக்குண்டு!!
அருகிருந்தே வழிநடத்த
பெற்றோரும், ஆசானும்
உடனுண்டு!! ஆழ்ந்த
அறிவு பெற செய்திகள்,
நூல்கள் இணையத்தி
ன்
வாயிலாக என் விரல்
நுனியில்!!
சிகரங்களும், ஆளுமைகளும் தொலைக்காட்சி
வாயிலாக நாளும் என் முன்னே!!
நாள்தோறும் என்னருகே
நித்தம் ஒரு தொழில்நுட்பம்!!
தொலை தொடர்பு ஏராளம் இங்கே
கொட்டிக்கிடக்க,
நான்கனிகளை மட்டுமே தேடி ஓடி,
என் எதிர்காலத்தை
செம்மையாக்குவேன்!!
பகுத்தறிவின் துணை கொண்டு, பட்டறிவின்
கோர்த்து,
தொழில் நுட்பத் தோழமை
உடன் வர,
ஆசானும், பெற்றோரும்
ஆசிகளை அள்ளி வழங்க,
என்
எதிர்காலத்தை நானே
தேர்ந்தெடுத்து
மணமுடிப்பேன்!!
இங்கே எதிர் காலமென்பது
வாழ்க்கைத் துணை அல்ல...
எனக்கே உரித்தான
என் வாழ்க்கைப்பாதை!!
காலம் மாறிப்போனது!
காட்சியும் மாறிப்போனது!!
மங்கையர் தம் கல்வி முதல்,
கணவர் வரை மற்றவர்
முடிவு செய்தது
அந்தக்காலம்!!
அறிவாற்றல் செறிவு
கொண்டு
அவரவரே முடிவு
செய்வது இந்தக்காலம்!!
அதனால் தான் ஓங்கி
உரைக்கிறேன்,