விருப்பத்திருப்பங்கள்
விருப்பத்திருப்பங்கள்
புதிதாக
ஒரு தோழி கிடைத்திருக்கிறாள்
எதோரிரவில்
எதேச்சையாகப் பேசத் தொடங்கியின்று
எதிர்வந்த எதிர்மறைக் கருத்துக்கள்
வழிவந்த விருப்பத்திருப்பங்கள்
தயங்கி நின்ற தசைத்தடைகள் தாண்டி
தவிர்க்க முடியாதவளாக
தன்னிலை ஊன்றி நிற்கிறாள்
என்மீது அன்பு செலுத்த
அவளிடமுள்ளது
ஒரே ஒரு நிபந்தனைதானாம்
என் இதயவெளியிலமர
இதுவரை யாரும் அமராத
இருக்கையைத் தர வேண்டுமாம்
அவளுக்காய் புதிதாக
உண்டாக்கிக் கொடுத்தால்
இன்னும் நலமாம்
இதேமாதிரி அனைவரும் கேட்
டால்
என்ன செய்வதென்றால்
எதிர்த்தர்க்கம் பேசாதே
எவரோடுமெனக்கு உறவில்லை
எனக்கானதைக் கொடுத்தால்
உன்னோடிருப்பேனென்கிறாள்
இல்லையென்றால் இழப்பு
உனக்குத்தானென்கிறாள்
இப்படி வேண்டிய எல்லோருக்குமாகக்
கொடுத்துக் கொடுத்துக் களைப்புற்றும்
நானே அமராத இருக்கையொன்று
நாட்கணக்காக இருக்கிறதெனக் கூறியழைத்து அமர்த்தியிருக்கிறேன்
அன்புற்றமர்ந்தோர் பலரால்
துன்புற்றுடைந்து சிதறிய
அநேக இருக்கைகளுக்கு நடுவில்
அலகிலா விளையாட்டுடை
அன்பின் தேவதையாய் ...