Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.7  

anuradha nazeer

Classics

அன்பு

அன்பு

1 min
1.2K


ஐஸ்வர்யம்" என்றால் பண கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல

வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்!*


வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்!*


எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்!*


அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்!*


மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை *ஐஸ்வர்யம்!*


பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்!*


இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்!*


பவுர்ணமி தினத்தில் சந்திரன் *ஐஸ்வர்யம்!*


உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்!*


பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்!*


இயற்கை அழகு *ஐஸ்வர்யம்!*


உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்!*


அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்!*


புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்!*


குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்!*


கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்!*


ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு *ஐஸ்வர்யம்!*


*ஐஸ்வர்யம்* என்றால் கையில் எண்ணும் பணக்கட்டு அல்ல !


கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்!*


மனசு அடையும் சந்தோஷம் *ஐஸ்வர்யம்..!*


*நம்மை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யமோ ஐஸ்வர்யம் தான்...*

*ஐஸ்வர்யம்* என்றால் அன்பு



Rate this content
Log in

Similar tamil poem from Classics