வீர மங்கை
வீர மங்கை
கடல் கடந்து வந்தது
காதலனை கணவனாக்கி கொள்ள மட்டுமல்ல
தன் கனவை நினைவாக்கி கொள்ளவும் தான்.
உயிர்த்து எழுந்த அலைக்கு
மத்தியில்
மங்கி மறைந்த சூரியனுக்கு எதிரே
தடுமாறி விழாமல்
தடம் பதித்து நின்ற தீவின்
சிகரத்தில்
சிக்கல்கள் நீக்கி
தன் கூந்தல் காற்றில் அசைய
வாகை மலர் சூடி நிற்கிறாள்
அந்த வீர மங்கை.
