மகாகனம் பொருந்திய
மகாகனம் பொருந்திய


கவிதை எழுத தேர்ந்தெடுத்த வார்த்தைகள்
மேசையிலெங்கும்
கிடந்தன அங்கும் இங்குமாய்.
தரம் பார்த்து, கனம் பார்த்து
இடம் வலம், மேல் கீழ்
ஒழுங்கு படுத்துகிறேன்,
என் கவிதையின் வரிகளை நிரப்ப.
தராசை எடுத்தேன்
ஒரு வரியின் கனத்தை
சம கன வார்த்தைகளால் வடிக்க.
ஒரு தட்டில் இரண்டு வார்த்தை
மறு தட்டில் அதற்கு நிகராய்
வேறிரண்டு வார்த்தைகள் வைக்க
முள் சமசீரானது
வார்த்தைகளை கீழிறக்கி
முதல் வரியாக்கினேன்.
மீண்டும், இடதட்டில் இரண்டும்
வலத்தட்டில் இரண்டுமாய்
வார்த்தைகளை அடுக்க
இடத்தட்டு க
ீழிறங்கியது
வேறு இரு வார்த்தைகள் தேடியடுக்கி
முள்ளை சீராக்கினேன்
இரண்டாம் வரி,
தன்னை கவிதையில் வரித்துக்கொண்டது.
இப்போது இடத்தட்டில்
ஒரு வார்த்தை வைத்தேன்
வலது தட்டோ நாலு வார்த்தைகளை
அக்கனத்திற்கீடாய்
ஈர்த்துக்கொண்டது..
சீர்தளைதட்டுமே என
கண் கட்டியது.
அவ்வார்த்தைகள் அனைத்தையும்
தரை இறைத்தேன்.
நாலு வார்த்தைகள் கவர்ந்த
அவ்வொற்றை வார்த்தை
யாதென நோக்கின்
தலைக்கனம் என்றிருந்தது...
தரையில் வீசியெறிந்தேன்...