புத்தரின் புன்னகை
புத்தரின் புன்னகை

1 min

40
ஒருக்களித்துப் படுத்து ,
சிசுவை தன்பால் இழுத்தாள்
சிசுவிற்கு தாய்பால்
குடுக்கும் யசோதரை.
இன்றோ நாளையோ
எப்போதோ...
ஆயின், யசோதரை அறிவாள்,
ஊருக்கு சித்தாந்தம்
உகட்டும் உபாத்தியனாய்,
ஓடப்போகும்சித்தார்த்தாவின்
மனக்கிலேசத்தை.
அவன் மேல் காதலாகி
கனிந்துருகிய யசோதரை
இதழ்களில் முறுவல்..
ஆசையே துன்பத்திற்குக் காரணம்
என்றும் அவன் சொல்லக்கூடும்.
எதையும் ஆராயாமல் மன்னித்து
உலகத்திற்கு புத்தரை தாரை வார்த்த அவள் செயல்
புத்தருக்கு புன்னகையை தந்தது.