STORYMIRROR

Latha Subramaniam

Classics

4  

Latha Subramaniam

Classics

அணைப்பின் கதகதப்பு

அணைப்பின் கதகதப்பு

1 min
409

கருப்பையின் சூடு

தாயின் அரவணைப்பில்!

பசியறிந்து இதழ் ஒற்றி

தேவையைத் தீர்த்திடும்

தாயின் அணைப்பு!

மாளிகையோ குடிசையோ

குளிருக்கு அடக்கமாய்

கம்பளியின் கதகதப்பு

தாயவள் சேலை தந்திடும்!

உணர்ச்சியைத் தூண்டி

உயிரை உருக்கும் காதல்

தந்திடும் நெருக்கமான

அணைப்பு!

பரிதவித்து தோள் சாய

அணைத்திடும் கைகள் தரும்

ஆறுதலான அணைப்பு!

வயது எத்தனை ஆனால்

தான் என்ன?

அணைப்பில் கதகதப்பில்

சுருண்டு கொள்ளத்தான்

விழையுதே மனது!!


லதா சுப்ரமணியன்.



Rate this content
Log in

Similar tamil poem from Classics