STORYMIRROR

Latha Subramaniam

Classics

4  

Latha Subramaniam

Classics

அன்பெனும் ஆயுதம்.

அன்பெனும் ஆயுதம்.

1 min
401

ஆழமான அன்பு

அபரிதமான அக்கறை!

இல்லை என்று சொல்லாது

முடியாதென்று தள்ளாது!

தப்பு கண்ணுக்குத் தெரியாது

தவறை சுட்டிக் காட்டாது!

கேட்டதைக் கொடுத்து விடும்

கேளாமல் எல்லாம் செய்யும்!

நம்பிக்கை வைத்த அன்பு

பழி ஏற்றுக்கொள்ளத் தயங்காது!

அன்பால் விட்டுக்கொடுக்கும்

கண்மூடித்தனமான அன்பு

கைத்தவறி விழுந்து விட்டால்

கண்ணாடி விரிசலாய்

இரண்டாகப் போய்விடும்!

நெஞ்சைக் கிழித்து

குருதி கொட்டும்!

அன்பே ஆயுதமாக மாறி

ஆயுளை முடித்துவிடும்!!


லதா சுப்ரமணியன்.

சென்னை.119



Rate this content
Log in

Similar tamil poem from Classics