STORYMIRROR

Latha Subramaniam

Others

4  

Latha Subramaniam

Others

நடைபிணம்

நடைபிணம்

1 min
304

முகநூலில் அறிமுகமாகி

ட்விட்டரில் தொடர்ந்து

ஷேர்சாட்டில் பகிர்ந்து

விழித்தது முதல் உறங்கும் வரை

நடப்பதை உலகறியச் செய்து

வாங்கும் லைக்குகளுக்காக

பைத்தியமாய் திரிந்தேன்!

பளீர் வெளிச்சத்தில் வாழ்வைத்

தொலைத்து இருட்டினில் மூழ்கி

மீளாத் துயரில் திரும்பி வர இயலாத

தூரம் சென்றேன்!

சுதந்திரமாய் இலக்கை அடையும்

வழி தெரியாமல் சிறகிழந்து

கூண்டுக் கைதியாய் முடங்கினேன்!

உயிரில்லா கைபேசி உணர்வுகளை

கொன்றிட நடைபிணமானேன்!!


லதா சுப்ரமணியன்.

சென்னை.119


Rate this content
Log in