அந்தக்காலம்
அந்தக்காலம்
இந்தக்காலஇளைய தலைமுறைகளால்
கனவிலுங்கூட
நம்ப இயலாத....
இவர்கள் காணாத.
அரை நூற்றாண்டுக்கு
முந்தைய எங்களின் இளமைக்காலம்..
அந்தக்காலம்...அது ஒரு பொற்காலம்..
பதவியிலிருந்தும் ஆடம்பரமில்லாதும்
தன்னலமில்லாதும்
நேர்மையாகவும்
மக்களோடு மக்களாக எளிமையாகவும்
வாடகை வீட்டிலும்
குடிசை வீட்டிலும்
அறம் சார்ந்து வாழ்ந்த
காமராஜர், கக்கன் ஜீவா என கண்ணியமான அரசியல் தலைவர்களின் ஆட்சிக்காலம்..
வேதிப்பொருட்களின்
வாசனை கூட
சிறிதும் படாமலும்.. கலப்படமில்லாமலும்
அன்றாடம் உண்ணுகிற
உணவு வகைகளில் தானியங்களிலும்
காய் கனிகளிலும் சிலவற்றையேனும்,
பெரும்பாலும்
தாங்களே உடல் வருத்தி
தங்கள் உழைப்பால்
உற்பத்தி செய்து
ஊரோடு பகிர்ந்துண்ட
உன்னதமான மனிதர்கள்
மண்ணிலே வாழ்ந்த காலம்..
தனக்குவாக்களித்த மக்களுக்கு
தான் அளித்த வாக்குறுதிகளை
அத்தனையையும்..
நிறைவேற்றிட திறமையாக
மக்களின் வரிப்பணத்தில்
ஊதியம் பெற்ற
அரசு அதிகாரிகளும்,
அரசு ஊழியர்ளும்..
மக்களின் ஊழியர்களாக
உழைக்க வேண்டிய
பொறுப்பையும்..
மக்களுக்காக நேர்மையாக சோர்வின்றி பணிபுரியவேண்டிய
கடமையையும்
முழுமையாக உணர்ந்து
ஊழலின் கறைபடாது
மக்களுக்காக பணியாற்றி
மக்களின் மரியாதையைப்
பெருமளவில் பெற்றிருந்த
சிறந்த காலம்..
பொதுச் சொத்துக்களைக் பாதுகாப்பது
ஒவ்வொரு குடிமகனின்
பொறுப்பும் கடமையுமென
உணர்ந்தும்
பொது இடங்களில் பொறுப்போடு நடக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்தும்
அறம் சார்ந்து நெறி தவறாத பொதுமக்கள் வாழ்ந்தகாலம்
பணத்துக்காகவும் வசதியான
வாழ்க்கைக்காகவும்
வெட்கமும் மானமுமின்றி
நேர்மையும் அறமுமின்றி
மனதினில் துளியும் ஈரமின்றி வாழுகின்ற தன்னலத்தை மட்டுமே நோக்கமாய் கொண்டு மனதின் எண்ணத்திலும்
செய்யும் செயலிலும்
ஊனம் மிகுந்த இன்றைய அரசியல்வாதிகள் போல அகத்தில் அழுக்குற்ற நாட்டின் உயர்வுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரான கண்ணியமில்லா கயவர்கள் இல்லாத காலம்..
..
அந்தக்காலம்..
நாங்கள் சிறு பருவத்தில்
இருந்தகாலம்..
இலக்கணத்தின் வரையரையில்
காலத்தின் அடிப்படையில் அது
இறந்தகாலம்..என்றாலும்..
அன்று நிகழ்ந்த காலம்
மக்கள் மகிழ்ந்த காலம்.,.
அந்த இறந்தகாலத்தின்
வசந்தகாலம்
இந்த நிகழ்காலத்தில்
இறந்து போனது..
தீயவையோடு தீயவரையும்
தீயிலிட்டுஎறிக்கவும்..
பொற்காலத்தின் பொன்னிற தீபச்சுடரை ஏற்றிடவும்..
நம்பிக்கைச் சிறுநெருப்பை
நெஞ்சிலே சுமந்திருக்கும்
நல்வோர்கள் முயற்சியினால்..
எதிர்காலத்தில்...
அந்தக்காலம் போன்ற வசந்தகாலம் மீண்டும்
வரும் வரையிலும்
இறந்தகாலம் போன்ற
சிறந்தகாலம் மீண்டூம்
மலரும் வரையிலும்
இந்த நிகழ்காலம்
இறந்தகாலமே..
அன்புடன்இரா.பெரியசாமி,...
