வாய்மூடிப் பேசவும்
வாய்மூடிப் பேசவும்
தொடங்கி விட்டது மூன்றாவது உலகப்போர்
ஆயுதம் எதுவும் இல்லைஅணுகுண்டு இல்லை ரத்தம்
ஏதும் சிந்தப்படவில்லை.
எதிரெதிர் மோதிக் கொள்ள இரு அணிகலில்லை.
மொத்த உலகமும் ஒருபுறம்
கோரமான கொரொனா மறுபுறம்
கத்தியின்றி யுத்தமின்றிபுரோதமாலே நடக்குது..
சத்தமின்றி, கொத்து கொத்தாய் உயிர்கள் சுருண்டு விழுகுது.
சமுதாயத்தில் தீண்டாமை
உயிர்ப்பிக்கபட்டது மீண்டும்
எல்லா நாட்களும் ஞாயிறாயிற்று..
காற்று சுத்தமாயிருந்தும்
முக்க்கவசம் அணிந்து,
நேரமிருந்தும் பேச ஆளின்றி
வெற்று தெருக்களினூடே
விளையாடாத குழந்தைகளென
வெறிச்சென உள்ளது
்தனித்திருக்கும் வாழ்க்கை.
அடக்கும் தடுப்பூசியைஎங்கோ எவரோகண்டுபிடிக்கக்கூடும்.
..உன் ஊழிப்போரை தடுக்கும்அந்தக் கண்டுபிடிப்பாளர்
தான்எங்கள் தார்மீக கடவுள்...
கொரோனா என்றால் கிரீடமாம் லத்தீன் மொழியில்உன்னைக்
கிரீடத்திலிருந்து இறக்கி விட்டுபுதைகுழியில் இடுவது தான்
இம்மானிடத்தின் மறுவேலை...