அவள்
அவள்
எந்தன் உலகத்தை
படைத்த
பிரம்மனே!!
அதனால் அவளை
அம்மா என்று
அழைத்தேனோ.!
எந்தன் அனைத்து
தேவைகளை நிறைவேற்றினாய்
அதனால்
அன்னையே என்று
கூற விழைந்தேனோ!!
நான் விரும்பும்
வரம் தருவதனால்
தாயே என்று
தன்னம்பிக்கையுடன்
அழைத்தேனோ!!
துன்பத்தில் தெய்வமே
விலகும் வேளையில்
என் கண்ணீரை
துடைக்க உன் மடியினை
தந்த எந்தன் தெய்வமே!
கல்வி கற்று தராத
பாடத்தையும்,
உலகின் பந்தங்களையும்
கற்றுக் கொடுத்த
எந்தன் ஆசிரியரே!
நோயில் இருந்து
என்னை காக்கும்
எந்தன் மருத்துவரே!
சிரிக்க இயலாத நிலையிலும்
என்னை சிரிக்க வைக்கும்
எந்தன் தோழியே!!
பிரசவத்தில்
மறுபிறவி எடுத்து
இப்பிறப்பிற்கு
உயிர் கொடுத்தாயோ!!
சுவையற்ற உணவும்
உன் கரங்களால்
அள்ளி தருகையில்
அறுசுவையாக மாறியதேனோ!!
வலியிலும் என்னை
அறியாமல்
துடித்த முதல் சொல்
நீ தானே!!
அம்மா...
ஓர் உயிர்
பல அவதாரங்கள்
எனக்காக எடுத்தாயோ!
உன் அளவற்ற அன்பிற்கும்
தியாகத்திற்கும்
இவ்வொரு நாளும்
இச்சொற்களும்
போதாது அம்மா!!
அதனால் நிறையன்றி
முடிக்கிறேன்...
இப்படிக்கு
உன் தொப்புள்க்கொடி உறவு!!
