காதல்
காதல்


கடிகார கடிகார முட்களை சுழற்றி வாழ்க்கையின் முற்பகுதியில் ஏதாவதொன்றை மாற்ற வாய்ப்பிருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்.
சட்டெனெ அவள் முகம் நினைவில் வர முற்காலத்திற்கு திரும்பி செல் அனைத்தையும் மாற்றிவிடு அவளுடன் இணைந்துவிடு என்று மூளை தூண்டியது.
இடைமறித்தது என் இதயம் இணைந்துவிட்டால் உன் காதல் தீர்ந்துவிடலாம் இவளையா நேசித்தோம் என்று எள்ளி நகையாடலாம் .
என்ன தான் செய்வதென்று மூளை கேட்டது எதையும் மாற்றாதே இதயம் சொன்னது.
நீ அவளை நினைக்கும்போதெல்லாம் அனுபவிக்கும் இனம் புரியாத இன்பத்தை இழக்க வேண்டுமா?
ஒரு குறுஞ்செய்தி கண்டவுடன் மனம் துள்ளி குதிப்பதை மாற்ற வேண்டுமா?
கெஞ்சி கேட்டபின் கிடைக்கும் கண்கள் மட்டும் தெரியும் அவள் புகைப்படத்தை பார்த்தும் மெல்லிய சத்தத்தில் அவள் குரலில் வரும் வாய்ஸ்மெசேஜ் கேட்டும் உயரப்பறக்கும் இன்ப நிகழ்வை நிறுத்த போகிறாயா
எப்போது சந்திப்போம் என்னவெல்லாம் பேச வேண்டும் என எப்பொழுதும் கற்பனை சிறகை விரிப்பாயே அதை சிறையில் அடைக்க வேண்டுமா.
நீ எழுதும் கவிதைகளை நிறுத்தப்போகிறாயா இணைந்துவிட்டால் என்ன சொல்லி கவிதை எழுதுவாய்
எதையும் இழக்காதே சாகும் வரை நேசி உன் காதலுக்கு எல்லையிடாதே இதே பரவசத்தோடு இதே காதலோடு என்றும் மாறாமல் வாழ்ந்து செத்து போ.
இதயம் சொன்ன வார்த்தைகளில் கால சக்கரம் உடைந்து சிதறியது.
அருகிலோ தொலைவிலோ இணைந்தோ இணையாமலோ நேசித்து கிடப்பது தானே காதல்!