STORYMIRROR

Kubendhiran Subbiramaniyan

Romance

3  

Kubendhiran Subbiramaniyan

Romance

காதல் பயணம்

காதல் பயணம்

1 min
63


நான் பல நேரங்களில் தண்ணீராகவே இருக்கிறேன் உன் பிரிவெனும் நெருப்பு என்னை சுடாமலிருக்க..

நான் பல நேரங்களில் மரமாகவே இருக்கிறேன் உன் கோவமெனும் மின்சாரத்தை என்னுள் கடத்தாமலிருக்க..

நான் பல நேரங்களில் நிழலாகவே இருக்கிறேன் உன் வெறுப்பென்னும் அருவியில் நனையாமலிருக்க..

நான் பல நேரங்களில் இலையாகவே இருக்கிறேன் நீ அன்பெனும் அறுசுவை உணவை பரிமாறுவதற்காக..

நான் பல நேரங்களில் கண்ணாடியாகவே இருக்கிறேன் உன்னுள் என் பிம்பத்தை பார்த்துவிடுவதற்க்காக..

நான் பல நேரங்களில் மௌனமாகவே இருக்கிறேன் உனக்கான என் வார்த்தைகளை சேமிப்பதற்க்காக..

நான் பல நேரங்களில் வறட்சியாகவே இருக்கிறேன் உன் காதல் மழையில் நனைவதற்க்காக..

நான் பல நேரங்களில் எலக்ட்ரானாக இருக்கிறேன் உனைச்சுற்றியே இயங்குவதற்க்காக..

நான் பல நேரங்களில் பயணியாகவே காத்திருக்கிறேன் உன்னுடன் காதல் பயணம் செய்வதற்க்காக..


Rate this content
Log in

Similar tamil poem from Romance