வாழ்க்கை மாரத்தான்
வாழ்க்கை மாரத்தான்

1 min

35
நிறுத்தம் தெரியா வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
ஓரளவு தூரம் கடந்த பின் சற்று நிதானமாக திரும்பிபார்த்து என்ன வாழ்க்கை இதுவென என்னையே திட்டிக்காெள்கிறேன்.
அமர்ந்து யோசிக்கும் சிறு கணத்தில் எனக்கு முன் ஏராளம் பேர் ஓடுகின்றனர்.
இதோ மீண்டும் தொடங்கிவிட்டேன் என் ஓட்டத்தை எதை இழக்கின்றேன் என்பதறியாமலே.
வாழ்க்கை ஒரு தொலைவறியா மாரத்தான்...