என் இனமடா நீ !
என் இனமடா நீ !
அலுவலக நண்பர்க்கு
அருண் ஷங்கர் இவன் பெயராம் !
அன்புக்கு உரியவர்கள்
அழைக்கும் பெயர் 'அப்பு' வாம்.
சேவைகள் செய்திடுவான்
மைத்ரியில்* சேர்ந்திட்டு !
சரியாகத் தேடிவரும்
சான்றிதழ் - இவன் பெயரிட்டு.
உன் வீட்டு நாய்க்குட்டி
உன்னைத்தானே சார்ந்திருக்கு - இந்த
திருவண்ணாமலைத் தம்பிக்கு
தாடி மீசை சேர்ந்திருக்கு.
சீரழிக்கும் சிகரெட்டை
சிந்தையிலும் தொட மாட்டான் - அடிக்கடி
பெயருக்கேனும் ஒரு சினிமா
பார்க்காமல் விடமாட்டான்.
சமீபத்தில் கைவந்த
சமையலோ புதுப் பழக்கம்! - நீ
ஊர்சுற்றி வந்தாலும்
உனக்கில்லை மதுப் பழக்கம்.
அமஸோனில் உன் ஆர்டர்க்கு
அலுவலகமே தரும் சாட்சி - வாங்கிட்ட
அத்தனையும் திரட்டிட்டால்
வைத்திடலாம் பொருட்காட்சி.
உருப்படா ஆட்சி இருப்பதால்
உன் உளமெலாம் தீ!
வெறிகொண்ட பாசிசத்தை
வெறுப்பதால் என் இனமடா நீ !
மைத்ரி - சேவை மற்றும் உடல்நலம் சார்ந்த பணிகள் செய்யும் குழு (அலுவலகத்திற்கு உட்பட்டது )