குத்தீட்டிக் கண்ணன்!
குத்தீட்டிக் கண்ணன்!
குத்தீட்டி கண்ணுக்குள்ள வச்சிருக்கான்டி - இவன்
நெஜ வீரம் நெஞ்சுக்குள்ள தெச்சிருக்கான்டி !
உடம்புகுள்ள ஓடுறது ரத்தமில்ல டா - அத
"நெருப்புக் குழம்பு" தான் ன்னு சொன்னா குத்தமில்லடா !
தேக்கு மர தேகத்துக்கு உயரம் ஆறடி - இவன
தேடி வந்து ஜெயிச்சு போன வீரன் யாருடி !
தாவி இவன புடிக்கனும்னா வேணும் "ஸ்டூல்" டா - இவன்
தாடி மீச சேர்த்து வச்ச "ஸ்டைலு" தூளு டா !
(குத்தீட்டி கண்ணுக்குள்ள....)
"அட யார் இவன்" னு அக்கம் பக்கம் கேட்டு பாருடா - அந்த
அடையார் பக்கம் "பிலிம" நீயும் காட்டி பாருடா !
கருப்பு புளிய ரசத்துக்காக ஊற வெச்சாங்க ! - ஒரு
சிறுத்த புலி க்கு "சர்ஃபராஸ்" ன்னு பேரு வெச்சாங்க !
(குத்தீட்டி கண்ணுக்குள்ள....)