சிந்தையில் நின்ற சிவா . . . .
சிந்தையில் நின்ற சிவா . . . .


(முன் குறிப்பு : சிவா ! பார்ப்பதற்கு பருத்திவீரன் "செவ்வாழை" போல் இருப்பார். வெள்ளிக் கிழமை பெங்களூரு கோவை மற்றும் ஞாயிற்றுக் கிழமை கோவை பெங்களூரு இரயிலிலும் பயணித்த காலத்தில் அறிமுகமானவர். பேசினாலே நக்கலும் நையாண்டியும் சரளமாய் வரும். நாங்கள் பயணிக்கும் கன்னியாகுமரி விரைவு இரயில் அதிகாலை 3 மணிக்கே கோவை அடைந்து விடும். சிவாவிற்கு சமீபத்தில் சொந்த ஊரான கோவையிலேயே "சாந்தி கியர்ஸ்" நிறுவனத்தில்லை கிடைக்க சொந்த ஊரான கோவைக்கே திரும்பி விட்டார். )
செவிளு கிழிய பிகிலு ஊதி
ரயிலு போகுது - நமக்கு
சனிக்கிழமை மூணு மணிக்கே
கோழி கூவுது !
சீட்டு கிடைக்க, நீட்டிப் படுக்க
மனசு ஏங்குது - நம்ம
சிவா அண்ணன் சீட்டு மட்டும்
காத்து வாங்குது !
கொங்குத் தமிழில் லொள்ளு பேசும்
சிரிப்பு ராசாவே - நெஞ்சுல
கொஞ்சம் கூட வஞ்சம் இல்லா
கருப்பு ரோசாவே !
சாதாரணப் பேச்சுலையே நையாண்டி
தெறிக்கும் - ஒரு
தோதான 'சிட்ட' பார்த்தா வாய்
சும்மாவா இருக்கும் !
சிவாண்ணன் பாக்கி சீட்டு யார்
கைக்கு கிடைக்குமோ - இனி அந்த
'சாந்தி கியர்ஸ்' ல என்னவெல்லாம்
கூத்து நடக்குமோ !
செவிளு கிழிய பிகிலு ஊதி
ரயிலு போகுது - நமக்கு
சனிக்கிழமை மூணு மணிக்கே
கோழி கூவுது !