இதயத்தை தந்து விட்டேன் !
இதயத்தை தந்து விட்டேன் !


எண் 2❤
அன்பே!
என் தாய்க்கு பின்னர்...
என்னை நேசிப்பவள் நீ!
நீ மட்டுமே!
நம் கண்கள் சந்தித்தன...
மனங்கள் கலந்தன...
ஈருடல் ஓருயிர் ஆனோம்!
ஓருயிர் ஆன பின்....
எனக்கென்று ஓர் உயிர் எதற்கு?
என்னுயிராய் நீ உள்ள போது....
உனக்கு சிறந்த, பரிசு ஒன்றை தர
ஆவல் கொண்டேன்!
எனக்காக துடிப்பவள் நீ மட்டுமே!
ஆகையால்....
எனக்காக துடிக்கும் இதயத்தையே தந்துவிட்டேனடி என் உயிரே!