அன்னை
அன்னை


அலார ஒலியாய் நான் இருந்தேன்
தாலாட்டும் இசையாய் நீ இருந்தாய்.
நேரம் எதுவாயினும் நானே உன் உலகமாய் உலாவினேன்.
வருடங்கள் பல கடந்துவிட்டன.
நானும் ஓர் தாயானாலும், உன் ஒரு நிமிட அணைப்பிற்கும், சிறு நேர மடிக்கும் ஏங்கும் குழந்தையாய் நானிருக்க என் குழந்தை எனை கட்டிக்கொண்டது.