ஒருத்தி வருவாள்
ஒருத்தி வருவாள்


ஒருத்தி வருவாள்;
கேட்காமலே இதயக்கூட்டினுள் இடம் புகுவாள்;
உறவுமுறைக்குள் எல்லாம் அடைபடமாட்டாள்;
அழும்போது சிரிக்க வைப்பாள்;
சிரிக்கும்போது சிலாகிக்க வைப்பாள்.
"நான் சொல்றத கேளு முதல்ல!"என அடம்பிடிப்பாள் ;
"நீ எல்லாரு மாதிரி இல்லடா நீ எப்பவுமே ஸ்பெஷல்தான்டா தங்கோ" என உனை கொஞ்சுவதையே பொழுதுபோக்கும் தொழிலாய் கொள்வாள்.
"நான் இருக்கேன்ல; என்ட்ட சொல்லு! "
"சொல்லிப்புலம்ப நீயாவது இருக்கயே!"
"அந்த ரேணுகா இருக்கால்ல டென்சன் பண்ணிட்டா இன்னைக்கு!" "உங்கிட்ட பேச
ிட்டே புளி போட மறந்துட்டேன் டா"
"இன்னைக்கு பக்கத்து வீட்டு கோழி கூட விளையாடிட்டு இருந்தேன்! "
என துளியும் தொடர்பில்லா விஷயங்களை ஒத்த அலைவரிசை உடையவனாய் எண்ணி உன்னிடம் சொல்லி தன்னிடம் தானே அழகியல் மொழி பேசுவாள்.
வாழ்க்கை ஏதேனுமொரு இடத்தில் இத்தகுபெண்ணை அனைவருக்கும் அடையாளங்காட்ட கடமைப்பட்டிருக்கும் ;
நீந்தத் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு உயிர்பிழைக்க படைத்தவனால் கடைசியாய் அனுப்பப்பட்ட மரத்துண்டு அவள்.
இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்!
அவள் தேவதைகளின் தேவதை!