STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Inspirational

4  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Inspirational

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

1 min
26

நான் அறிந்த முதல்....

முழுமை!

ஆளுமை!

நம்பிக்கை!

உலகம்!

துணை!

அரவணைப்பு!

அன்பு!

கோபம் எல்லாமே நீ!

இலக்கு என்பது....

உன்னிடம் பாராட்டு!

உன் நன்நம்பிக்கையை பெறுவது!

உன் துணையை பெறுவது!

உன் வருகைக்கு முன்

இரவு உறங்காமல்...

இருக்க முயற்சித்தது!

மறவாதது...

தெனாலிராமன் கதைகள்!

குரங்கின் ஈரல் கதை!

தின்பண்டங்கள்!

விசேச நாள் விடியும் முன்...

உடுத்திவிட்ட புத்தாடை!

எத்தனை எத்தனை 

நினைவுகள்!

கல்லூரி...

ஆசிரியர் பயிற்சி...

கல்யாணம்..

ஒரு மாத கைக்குழந்தையாய்...

உன் பேத்தி!

நீ..

நிரந்தரமாய் விடைபெறுகையில்!

உன் தினம் இன்று!

தினம் தினம் கண்ணீரின் 

ஈரம் கொண்டு 

காயாமல் 

பார்த்துக்கொள்கிறேன்!

நெஞ்சம் நிறைந்த 

உன் நினைவுகளை...

அப்பா!!!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational