மயானம் மாறுபட்டது
மயானம் மாறுபட்டது
தலைப்பு:: மயானம் மாறுபட்டததே"""
மாண்டவன் சுமந்தானே பூமியில் தான் பெற்றவனை """
நான் சுமந்த தோளில் நீ சுமக்க மறந்தாயா மகனே ""
காலம் மாறலாம் உன் காலடியும் மாறுபட்டதா என்னை சுமக்க ""
தீண்டாதா வாகனத்தில் திரும்பி பார்க்க வைத்தாயே என்னையும் ""
மோக அரைக்குள் தீயிட்டு எரித்தாயோ ""
உன் கை விரல் பாதங்கள் படாமல் ""
குடுவையில் அடைத்து ஆற்றில் கரைத்தாயோ ""
கனவிலும் கலங்காமல் நீ ""
உன் ஒரு சொட்டு கண்ணீரில் என்னை அணைத்தாலே என் தேகமும் மகிழ்வு அடையுமோ ""
பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறாய் மகனே ""
இன்று நீ என்னை கடந்தாயோ நாளை உன்னை கடக்க யார் ""
மாறும் காலத்தில் உன் கடமைகளையும் கலைத்து விட்டாயோ ""
அவசர அவசரமாக ""
உன் அலங்கார ஆர்ப்பாட்டத்தில் என்னை மறந்தாயோ
மயானத்தில் ""
என் கடைசி நொடியிலும் உன் கைவிரல் படாமல் ""
நன்றிகளுடன்...
கவிஞர் ம.செல்லமுத்து
எம்.ஏ..பி .எட்..
நூத்தப்பூர் அஞ்சல்
பெரம்பலூர் மாவட்டம்

