சுதந்திரம் காப்போம்
சுதந்திரம் காப்போம்
*சுதந்திரம் காப்போம் ..!!*
🇮🇳🇮🇳🇮🇳 🫵🏻 🇮🇳🇮🇳🇮🇳
சுதந்திரமே சொல் சுவடுகள் இழந்தாயோ...?
குருதி காயங்கள் சான்றுகள் இல்லாமல் சாயங்கள்
ஆனதால்
முன்னோர்களின் உரை எங்கே எங்கே
மாய பின்னணியில் மயக்கம் ஆனதே மனிதம்
ஆம்
காலம் கடந்த குருதி சின்னங்கள்
சுதந்திர சுவடுகளாக இன்று சித்திரம் பேசுது
நம் சிந்தனை சின்னங்கள்
அன்று
வெள்ளையனின் எண்ணங்கள் வென்று
அடக்குமுறை கையாண்ட காலம் ஒன்று
அவை கொண்டு போர்க்களமானது அனைத்து கரங்களும் நின்று
வெளியேறு என்று குரல் மொழி நாடெங்கும் ஒன்று
இதை அறிந்த அவனோ திகைத்து நின்று
வெள்ளையனே வெளியேறு
இது எங்கள் நாடு
வெள்ளையனே..! வெளியேறு..!
புரட்சி மொழி ஒன்று அது அன்று நாடெங்கும் நின்று
சுதந்திரம் வென்று
ஆனால் அது இன்று
எதில் சுதந்திரம் யாருக்காக சுதந்திரம் எதற்கு சுதந்திரம்
என்று கேள்விகள் நின்று நாடெங்கும் இன்று
நாட்டுக்கு ஒரு சுதந்திரம் நயம் இல்லாமல் இது நிரந்தரம்
ஆம் கிடைக்கப்பெற்றது
சுதந்திரம் எதில் சுதந்திரம்
மற்ற உயிர்களின் உரிமையை
பறிப்பதா..!அதை அழிப்பதா..!
மனிதன் ஆறறிவு பெற்றதால் அகிலம் அடிமையானதா..!
இல்லை அனைத்தும் மனிதனுக்கானதா
இதில் எது சுதந்திரம்..!!
கோட்பாடு இழந்த இன்றைய இவ்வுலகம்
அடிமையாக்கி ஆள்கிறது அகிலம்
பஞ்சபூதங்களும் பழமை இழந்தது
பார்க்கும் இடமெல்லாம் உயிர்களின் பட்டினி பட்டியல்
சாதி மத இன குல ஏழை விழ
மாற்று நிலை
ஏற்ற இறக்க கோட்பாடு மனித இன குறைபாடு
பல நாடுகளில் இது அறிவியல்
அறமும் ஆக்கமும் இழந்த மனிதா
மாற்றம் என்று நினைத்து மரண பின்னணியில்
நடைமேடை போடுகிறாயே..?
ஆம்
தனி மனிதனுக்காக இயங்குகிறது
இங்கு
நாடெனும் காட்சி மேடைகள்
மக்களே சாட்சிகள்
இதில் எத்தனை உயிர்கள் தினம் தினம்
உருவம் இழந்த நிலை இன்று
நாடா இது சுடுகாடா
வேற்றுமை துன்பங்கள்
வேடிக்கை பார்க்கும் வேங்கைகள் மட்டுமே
மேடைகள் பாதைகள் இதுவே இன்றைய
நாட்டின் நடை மேதைகள்
இந்திய
சுதந்திர நாட்டின் இன்றைய சுதந்திரம் இது ....!!
புரிந்து கொள் மனிதா..!!
புலன் இல்லா மெய்..!!
அறம் இல்லா அறிவு..!!
தனி ஒருவன் நிலை..!!
ஐயும் நிறை உரை..!!
ஏடு மேடு காடு..!!
நீ அதை சாடு..!!
குருதி களம் நாடு..!!
நிலை இல்லா கூடு..!!
இது பூவியின் ஏடு..!!
முதலில்
மனிதம் காப்போம்..!!
பிற உயிர் நேசிப்போம்..!!
ஒருமை காப்போம்..!!
உலக ஒற்றுமை கேட்போம்..!!
*🤏🏻நன்றிகளுடன் ......!!*
மெய்யெழுத்தன்
கவிஞர் ம.செல்லமுத்து எம்.ஏ..பி.எட்..
உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்க கலைப் பண்பாட்டுக் குழு செயலாளர்
நூத்தப்பூர் அஞ்சல்
வேப்பந்தட்டை வட்டம்
பெரம்பலூர் மாவட்டம்
அகுஎ;621117
அஎ;7402380920
