கால மாற்றம்
கால மாற்றம்
எலும்பும் தோலுமாய் நாயொன்று அலைய கண்டேன்
ஐயஹோ .... காடுகளில் வேட்டையாடி....
கண்டதை அடித்துக் கொன்று
பசியை தீர்த்து களியாட்டம் ஆடி திரிந்து கொண்டிருந்தவற்றை...
மனிதன் தன்னோடு வளர்த்து.....
தன்னிச்சைக்கு ஆளாக்கி......
தான் உண்டவற்றை வழங்கி....
பழக்கவழக்கங்களை மாற்றி....
இன்று தன்னை கவனிக்கவே நேரமின்றி
தள்ளாடும் அவன் ....
தன்னைச் சுற்றி வாழ்பவற்றை....
சிந்திக்க ஏது நேர காலம்?
முன்பெல்லாம் வாசலில் நாய் நின்றாலே....
வாயில்லா ஜீவன் பாவமென்று உணவிட்டு பசியாற்றுவர் !
அதுவும் ஒரு ஜீவன் என்று கரிசனம் காட்டுவர்!
பெற்ற தாயை பெற்ற பிள்ளையை பரிதவிக்க விடும் காலம். இது....
நாய்களுக்கா பரிதாபம் காட்டும்?
எத்தனை பசியோ? இறைவா... என்று
வாழையிலையிட்டு உணவு படைத்தேன்!
அதுவோ மோர்ந்து பார்த்து விட்டு ஓடியது!
பிடிக்க வில்லை போலும் என்றே திரும்ப எத்தனித்தேன்...
கண்ட காட்சி சற்றே சிந்திக்க வைத்தது!
தெருவில் வீசப்பட்ட சானிட்டரி நாப்கீனையும்..... பேபி டையாப்பரையும்....
தன் கூரிய நகங்களாலும்.... பற்களாலும்....
கிழித்து ருசித்தது..
எத்தனை மாற்றங்கள் மனிதனுக்குள்ளும்.... விலங்குகளுக்குள்ளும்!
இயற்கை யோடு ஒன்றி.... இயற்கை உணவை விரும்பி உண்டு இரசித்த
காலம் போய்....
கண்டதை தின்று.... அற்ப ஆயுளில் காலனுக்கு இரையாகும் ....
கதையை எண்ணி.... கண்கள் பனித்தன!
இதுதான் கால மாற்றமோ?