அண்ணா தங்கச்சி
அண்ணா தங்கச்சி
சிறுவயதில் "பப்பா" என அழைத்து சிரித்து மகிழ்ந்தாய்!
சிறுபிள்ளையாய் நான் சிணுங்க அதைக் கண்டு நீ சிரிக்க
இன்றும் இனிதாய் நினைவுகள் நிலைத்துள்ளது நெஞ்சில்...!
உடன்பிறவாமல் போனாலும் உன் தங்கை என்னும் உறவு மாறவில்லை!
அக்கறை கொண்ட அண்ணன்களுக்கு மத்தியில் அன்பு தங்கையாய் நான்!
அதிகம் விளையாடியதுமில்லை...
அதிகம் அடித்துக்கொண்டதுமில்லை...
ஆனாலும், நம் அண்ணன்-தங்கை உறவில் மாற்றமேதுமில்லை!
"உன் அண்ணன்" என உரிமையாய் எவரேனும் கூறினால்
என் உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
அண்ணன் என்னும் வார்த்தையில் அளவற்ற ஆனந்தம் அடைந்தேன்!
அடிக்கடி காணவில்லையென்றாலும் அவ்வப்போது சந்தித்து மகிழ்ந்தேன்!
வாடி நிற்கும் என்னை வம்பிழுக்க வந்த உன்னைக் கண்டு நான்
அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இங்கில்லை!
என் சமையலை சலிப்பின்றி கிண்டல் செய்வதில் கில்லாடி நீ!
உன்னுடன் பல மணி நேரம் செலவிட ஆசை தான்...
ஆனால், அதற்கான அழகான வாய்ப்பு மட்டும் அமைவதேயில்லை...
அற்புதமான அந்த அழகான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா...
ஆயுள் முழுதும் ஆலமரம் போல் நம் அண்ணன்- தங்கை உறவு செழித்து நிற்கும்
என்ற உறுதியுடன் தங்கை
