வெற்றிலை
வெற்றிலை
வெறுமை இலை !
வெற்றிலை
வெறுமையாக
இருக்கும்
இலையிலேயே 'வெற்றி'
வந்து சேரும் போது
திறமையாக
இருக்கும்
நமக்கு ஏன்?
வெற்றி வந்து சேராது...
அந்த
வெறுமையுடன்
இலை சேர்ந்ததால்
வெற்றி கிடைத்தது
அதைப்போல் நம்
திறமையுடன்
முயற்சியை சேர்ப்போம்
வெற்றியானது
நம்மைச் சேராமல்
வேறே எங்கே போய்விடும்!!
