நிலா
நிலா
நான் பார்த்த
முதல் நாளிலிருந்து...
இன்றுவரை
என்னை தொடர்ந்து வருவதை
நிறுத்தவில்லை...
என்னை சுற்றி வருகின்ற
காரணம் கேட்டால்...
மறைந்து கொள்கின்றாய்
அமாவாசை என்று சொல்லி..
இமைக்காமல்
ரசிக்க நினைக்கையில்...
நித்திரை கொடுக்கின்றாய்....
எந்நாளும்
என்னை தொடரும்
உன்னை
ஒரு நாளாவது
தொடர்ந்து வர ஆசை...
கனவிலாவது
உன்னை வந்ததடைவேன்...
என் நிலாவே…!