அம்மா
அம்மா


அம்மா
என் குரல் கேட்கும் முன்பே
என் முகம் பார்க்கும் முன்பே
என்னை முதலில் நேசித்த ஓரே ஜீவன் என் அம்மா…..
உன்னால் நான் பிறந்தேன் எனவே
நீ என் முதல் தெய்வம்;
உன்னால் நான் வளர்ந்தேன் எனவே
நீ என் முதல் குரு
நான் கேட்ட முதல் பாட்டு என்றால்
அது உன் தாலாட்டு மட்டுமே
பிறருக்கு நாம் வலி கொடுத்தால்
அவர்கள் நம்மை வெறுப்பார்கள்
ஆனால் நீயே
நான் பிறக்கும் போது பல வலிகளை
உனக்குக் கொடுத்தேன் அதையும் நீ
தாங்கிக்கொண்டு என்னை நேசித்தாய்