ரஸ்னா வார்த்தைகள்
ரஸ்னா வார்த்தைகள்
அவனுக்கு ஐந்து மணிக்கே
அரைமனதானது வேலை
ஆறுதல் சொல்ல ஆளில்லை
ஆறு மணிக்கு மேல்
அன்பு காட்ட வரவில்லை
அந்த ஆண்டவன் கூட
வெயில் விளையாட்டும்
ரஸ்னாவும் நினைவுக்கு வர
வெளியே போக ஆசை வந்தது
அனல் காற்றை சுவாசிக்க
இந்த குளிர் காற்று விடவில்லை
பத்து மணிக்கு மேல்
காதலி வார்த்தைகள் வர வர
காற்றாய் கனவு வந்தது
மனம் குளிர்ச்சி தந்தது
