கறையான கரை வேட்டிகள்
கறையான கரை வேட்டிகள்
பாதயாத்திரை சென்ற பாதிரியார்
பாதிவழியில் பாழடைந்தார்
பாழாய்போன சாக்கடையால்
பக்குவமாய் தெரிவித்தார்
மேலும் கறைகளை தடுக்க
மீண்டும் அது கரை செய்தது
சாலையோர வெள்ளை பூக்களை
அதுவரை பொறுத்தவர்
போராளி ஆனார்
போருக்கு செல்லாமலே
கறைகளை தடுக்க
கரை வேட்டி கட்ட
அது காவி வேட்டிகளை
காத்து வந்தது
அனால் அவருக்கு தெரியாது
அது தான் வெள்ளை சட்டையை
ஒருநாள் சிகப்பாக்கும் என்று
