எங்கே என் காடு
எங்கே என் காடு
ஆடிய நாட்கள் நினைவில் வர
ஓடாமல் ஆடியது சில நாட்கள்
தேடி தேடி சென்றாலும்
திகட்டாத திங்கள் அது
அன்று காடுமலைகளை
தேடி தேடி சென்றோம்
வன விலங்குகளை காண
இன்று வீடு தேடி வருகிறது
வீதியில் தூங்கும் மனிதனின்
மீதியாய் வரும் யானைகள்
செய்தியாய் வரும் காலையில்
சிலரை பாதியாய் ஆக்கியது பற்றி
நாம் ஒன்றை அழித்தால்
அது நம்மளை பழிக்கும்
இப்படித்தான் பச்சைநிற காடு
பழுப்பு நிற காடு ஆனது
