கூண்டுப் புறா
கூண்டுப் புறா
1 min
4
காலை வெண்பனி பார்க்காமல்
வெண்ணிலா கை கோர்க்காமல்
வேட்டைக்கு சென்றான் வீரன்
வில் அம்பு இல்லாமல்
வெண்ணிற உடையில்
உள்ளே சென்றான்
கூண்டுப் புறாவானான்
வெளியே அழைத்தது
மஞ்சள் ஒளி
கரிபடிந்த கண்களுக்கு
கார்மேக கூந்தல் தெரிய
காணாமல் போனான்
கண்ணன்
கரையோடு வெண்ணிலவை
கரையாக்க வந்தான்
காணாமல் போனான்
மறுநாள் வேட்டை
கூண்டிற்குள்
இப்படி தான் வருகிறது
சந்தோஷம் இவன்
வாழ்வில்
